நாடக கலை மரபு
தமிழ் நாடக கலையின் முன்னோடிகள் மற்றும் புரவலர்கள். இவர்களின் பங்களிப்பு தமிழ் நாடக உலகிற்கு மிகவும் முக்கியமானது.

சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகமும் திரை உலகமும் புதிய உயரத்தில் சென்று சேர்ந்ததற்கு முக்கிய பங்களிப்பு செய்தார். 40 நாடகங்களை எழுதி, கூத்து மரபை வளர்த்ததுடன், தமிழ் நாடக உலகை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றார்.

என்.எஸ். கிருஷ்ணன்
நகைச்சுவை அரசன் மற்றும் நாடக முன்னோடி
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நாடக துறையில் தனது பயணத்தை தொடங்கி, தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவர் தனது கலையை சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார்.

எங்கள் நோக்கம்
நாளைய உலகிற்க்கு! நாடகக்கலைக்கு உயிர் கொடுப்போம்!! தமிழ் இசைக்கும், நாடக்கலைக்கும், பிரிக்கமுடியாத இரண்டற கலந்த நம் மரபுவழி நாடகத்தன்மைகளை அடையாளம் காணுவோம்.

எங்கள் பயிற்சித் திட்டம்
இசை என்பது விளக்க முடியாத ஒரு மொழி இசைமொழி எழுதப்படமுடியாத ஒரு வித்தை ஆதிக்க உணர்வுகளின் எண்ணங்களை கொண்ட மேடை நாடகக் கலைக்கு பயிற்சியகம் நடத்தப்படுகிறது.
- •பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள்
- •தாய், தந்தையை இழந்த மாணவர்கள் மாணவியர்கள்
- •குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வருமானம் இருத்தல், அதுவும் தினக்கூலியாக இருத்தல்
- •பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்தி, வறுமை நிலையில் உள்ள மாணவர்கள்
- •நாடகக்கலையும், இசைப்பயிற்சியும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள்
நாடகக்கலையே எங்களின் உயிர் மூச்சு
வாரம் தோறும் சனி, ஞாயிறு மட்டும் உணவுடன் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
அகமும், புறமும், ஆனந்தவாழ்க்கை, அதிலும் சமூகத்திறக்கும், பயனுள்ள அர்த்தமுள்ள கலை வாழிக்கை பாதையாக அத்தனை இளைஞர்களுக்கு சாத்தியமாகுதல், என்ற ஆய்வு நோக்கில் தொடர்கிறது.



