WhatsApp Icon

ராஜா தேசிங்கு நாடக மன்றத்தைப் பற்றி

அன்புடையீர்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த ரங்கன் - கெங்கம்மாள் அவர்கள் ஈன்றெடுத்த மகன்கள் ர.தவமணி, ர.ராமமூர்த்தி இருவரும் 6 வயதிலிருந்து கிராமத்தில் விளையாட்டு பிள்ளைகளுடன் கூடி தெருக்கூத்து வேடம் கட்டி பிறகு கிராமத்தில் நடக்கும் திருவிழாக்களில் மு.துளசி, நாடக ஆசிரியர் உதவியுடன் தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க வைத்தனர்.

வறுமை நிலையில் ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாது வறுமை எங்களை வாட்டிய போது எங்கள் பெரிய தாய் குப்பம்மாள் அவர்கள் எங்களின் கலை உணர்வைப் புரிந்து கொண்டு காஞ்சிபுரம் புஞ்சை அரசந்தாங்கல் நாடக வித்துவான் அமரர் என்.ஜி.தேவன் அவர்களின் மேடை இசை நாடகத்தில் பயிற்சி அளித்து 10 ஆண்டுகளாக நாடக பயிற்சி பயின்று, தெள்ளாரம்பட்டு தெய்வத்திரு, தனபால் சுவாமிகளின் நாடக மன்றங்களிலும், அமரர். திரு.கோபால் அவர்களின் நாடக மன்றங்களிலும் நடித்து, செய்யார், ஆரணி, மற்றும் வந்தவாசி போன்ற நாடகக் குழுக்களில் நடித்தும் செஞ்சியில் 2003ம் ஆண்டு இளம் கலைஞர்களை பயிற்சி தந்து அரசு பதிவு பெற்று நாடக கலை வளர்ச்சி பெறுவதற்காக இளம் தலைமுறையினருக்கு நாடகக் கலை தாக்கம் தெரிய வேண்டும் என்று எங்களின் இல்லத்தில் வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் எவ்வித கட்டணம் இன்றி இலவச உணவு ஏற்பாடுகளுடன் கிராமிய கலைச்சோலை நாடக பயிற்சி கலைக் கூடம் நடத்தி வருகின்றோம்.

நாடக பயிற்சி நேரம் மாதம் சனி, ஞாயிறு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.

2012ம் ஆண்டு வரை நாடகப் பயிற்சியின் ஆசிரியர் நாடக மாமணி திரு.ர.ராமமூர்த்தி அவர்களால் நாடகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு முடிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாடகப் பயிற்சியில் தேர்வு பெற்று தெருக்கூத்து, மேடை நாடகம், போன்ற கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். நாடக மன்றத்தைப் பாராட்டியும், எங்கள் குழுவின் ஆசிரியரும் ர.ராமமூர்த்தி அவர்கட்கு 50க்கும் மேற்பட்ட விருதுகளும், தஞ்சாவூர் கலைப் பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் அய்யா முத்து அவர்களாலும், முன்னாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஔவை நடராஜன் அவர்களின் பாராட்டுதலும், புதுதில்லி தேசிய நாடக ஆய்வாளர் உயர்திரு. அரிமளம் பத்மநாபன் அவர்களின் பாராட்டுதல், விருதுகளும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. விஜயக்குமார் அவர்களின் பாராட்டுகளும், விருதுகளும் மற்றும் மத்திய அமைச்சர்கள் உயர்திரு. ஜெகத்ரெட்சகன், உயர்திரு. செஞ்சி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களால் விருதுகளும், பாராட்டுதலும் மற்றும் கிராமங்கள் தோறும் ஊராட்சிமன்றத் தலைவர் விருதுகளும், பாராட்டுகளும் பெற்று சுமார் 31.12.2024 ஆண்டு முடிய 47 ஆண்டுகள் கலைத்துறையில் 14 ஆயிரம் மேடைகளில் நாடகம் நடத்தியும் வருகின்றோம்.

மற்றும் குடி குடியைக் கெடுக்கும் குறும்படம் திரைத்துறை இயக்குநர் திரு.பாரதிசேரன் அவர்களின் குறும்படத்தில் நடித்து மக்கள் தொலைக்காட்சியில் சிறந்த குறும்படம் என பாராட்டுதல் பெற்றது.

ராஜா தேசிங்கு நாடக மன்றக் குழுவை நடத்தி வருவதோடு, விழுப்புரம் மாவட்ட நாடக சங்கத் தலைவர் பொறுப்பையும் ஏற்று செயலாற்றி வருகின்றோம்.

ராஜா தேசிங்கு நாடக மன்ற பொறுப்பாளர்கள், நாடக ஆசிரியர் நாடக மாமணி ர.ராமமூர்த்தி அவர்கள், தலைவர். கு.ஆறுமுகம் மற்றும் ஏ.பாண்டியன், பொதுச் செயலாளர் திரு.ர.தவமணி, பொருளாளர் கு.அறிவுக்கரசி, துணைச் செயலாளர் திரு.ப.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் திரு.மு.அ.ராஜேந்திரன் (தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்), சட்ட ஆலோசகர்கள் திரு.க.செம்மலை, பி.எஸ்.சி., பி.எல்., (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்) மற்றும் திரு.திருமலை, எம்.ஏ., பி.எல்.,

செஞ்சி வட்டாரத் தலைமை வழக்கறிஞர் அவர்களின் அங்கீகாரத்துடன் இளம் கலைஞர்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் புதுப்பித்து சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கோ.மொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாயகி - குப்பன் அவர்களின் மகன் கு.ஆறுமுகம் சிறு வயதிலிருந்தே கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்து நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் ர.ராமமூர்த்தி அவர்களிடம் 5 ஆண்டுகள் மேடை நாடக பயிற்சி பெற்று ராஜா தேசிங்கு நாடக மன்றத்தில் அம்மன், பெண் கதாபாத்திரங்கள், மற்றும் நாயகன் போன்ற சிறப்பு வேடங்களில் நடித்துவருகிரார். அதுமட்டுமின்றி இவர் தமிழ்நாடு அரசின் கலை வளர்மணி, மதுரை நாட்டுபுற கலைகளின் ஆராய்சி மையத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் நாட்டு புறவியல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் தற்பொது ராஜா தேசிங்கு நாடக மன்றத்தின் பயிற்றுனர் பணியாற்றி வருகிறார். தென்னக கலை பன்பாட்டுமையத்தின் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். அரசு விழாக்கள் மற்றும் கிராம நிகழ்ச்சிகளில் பல விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்று தற்போது செஞ்சி ராஜா தேசிங்கு நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

பதிவு சான்றிதழ்கள்

சர்வதேச தர நிர்ணய சான்றிதழ்
சர்வதேச தர நிர்ணய சான்றிதழ்
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அங்கீகார சான்றிதழ்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற அங்கீகார சான்றிதழ்
தமிழ்நாடு பதிவுத்துறை சான்றிதழ்
தமிழ்நாடு பதிவுத்துறை சான்றிதழ்
தமிழ்நாடு சங்க பதிவு சான்றிதழ்
தமிழ்நாடு சங்க பதிவு சான்றிதழ்
தவமணி உறுப்பு தான சான்றிதழ்
தவமணி உறுப்பு தான சான்றிதழ்